சிவகாசியில் முழு ஊரடங்கு, வெறிச்சோடிய சாலைகள்

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இன்று கொரோனா தொற்று 3வது அலை காரணமாக, 2வது வார ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை பொது முழு ஊரடங்கு அமல் படுத்தி வருகிறது. இன்று 2வது வாரம் ஞாயிறு முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அத்தியாவசியத் தேவைகளான குடிநீர், பால் மற்றும் பத்திரிக்கைகள் விநியோகம் தடை இல்லாமல் நடந்து வருகிறது. மருத்துவமனைகள், மருந்தகங்கள் வழக்கம் போல செயல்படுகின்றன. முழு ஊரடங்கை முன்னிட்டு பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். கடைகள், வர்த்தக நிறுவனங்கள் முழுமையாக மூடப்பட்டுள்ளதால், எப்போது இரைச்சலாக இயங்கிவந்த சிவகாசி நகர் பகுதிகள், பெருத்த மௌனத்தில் மூழ்கியுள்ளது.

scroll to top