விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் இலவச கண் பிரிசோதனைகள் செய்யப்பட்டது. சிவகாசி, அணில்குமார் கண் மருத்துவமனை சார்பில் காவலர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. சிவகாசி காவல் சரகத்தில் உள்ள சிவகாசி நகர், சிவகாசி கிழக்கு, அனைத்து மகளிர் காவல் நிலையம், மாரனேரி, திருத்தங்கல் மற்றும் எம்.புதுப்பட்டி காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 250க்கும் மேற்பட்ட காவலர்கள், சார்பு ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் கண் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை அணில்குமார் கண் மருத்துவமனை மற்றும் காவல் துணை கண்காணப்பாளர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்தது.
சிவகாசியில், போலீசாருக்கு இலவச கண் பரிசோதனை முகாம்
