சிவகங்கை மாவட்டத்தில், நடைபெற்ற மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு

தமிழக அரசின், உத்தரவின்படி, 12.09.2022 முதல் கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்கள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட 25 கொரோனா தடுப்பூசி முகாம்களின் மூலம் 6,96,182 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இன்று 26-வது கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.
கடந்த 16.01.2022 முதல் 25.03.2022 வரை முதல் தவணை தடுப்பூசி 19,03,370 கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் 18 வயது மேற்பட்டோர்களின் முதல் தவணையாக 9,86,085 நபர்களுக்கும், இரண்டாம் தவiணையாக 8,12,566 நபர்களுக்கும், 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் முதல் தவணையாக 53,672 நபர்களுக்கும், இரண்டாம் தவணையாக 26,337 நபர்களுக்கும், 12 வயது முதல் 14 வயதிற்குட்பட்டவர்களில் 24,145 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை தடுப்பூசியாக 10.01.2022 முதல் 7,967 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து, தமிழக அரசின் உத்தரவின்படி, இன்றைய தினம் சிவகங்கை மாவட்டத்தில் 26-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்திட திட்டமிடப்பட்டு, 65 முகாம்கள் நகராட்சிப்பகுதிகளிலும், 585 முகாம்கள் ஊரக மற்றும் பேரூராட்சிப் பகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 650 இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, 47,000 கோவிஷீல்டு தடுப்பூசிகளும், 19,500 கோவாக்சின் தடுப்பூசிகளும், 20,000 கோர்பிவேக்ஸ் தடுப்பூசிகளும் என மொத்தம் 86,500 தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் மாவட்டம் முழுவதும் நடைபெற்று வருகிறது. கொரோனா நோய்த்தொற்றில் இருந்து முழுமையான பாதுகாப்பு பெற 12 வயதிற்கு மேற்பட்ட அனைத்து நபர்களும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளை அவசியம் செலுத்திக் கொண்டு அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என, மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ச.ராம்கணேஷ், மருத்துவர் ஆர்.கலாவதி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top