சிறு தானிய பயிர்களை ஊக்குவிக்கும் வண்ணம் பிரச்சார வாகனங்களை துவக்கி வைத்த கோவை மாவட்ட ஆட்சியர்

Millets-2023-scaled.jpg

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து மிக்க சிறு தானிய பயிர்களை ஊக்குவிக்கும்  வண்ணம் பிரச்சார வாகனங்களையும், வேளாண்மை பொறியியல் துறையின் சார்பில் கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டவிளக்க சிறப்பு பிரச்சார  வாகனத்தையும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் கா.முத்துலட்சுமி, வேளாண்மை துணை இயக்குநர்/மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தமிழ்செல்வி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் ஞானமுருகன், வேளாண்மை துணை இயக்குநர்கள் கிருஷ்ணவேனி, பெருமாள்சாமி, வேளாண்மை உதவி இயக்குநர்கள், துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வேளாண்மை பொறியியல் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறியும் வகையில் சிறப்பு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.  இந்த வாகனம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர், எஸ்.எஸ். குளம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி வடக்கு, பெரியநாயக்கன்பாளையம், காரமடை,தொண்டாமுத்தூர், மதுக்கரை,  பொள்ளாச்சி தெற்கு, ஆனைமலை, சூலூர், சுல்தான்பேட்டை ஆகிய வட்டாரங்களில் திங்கட்கிழமை முதல் 24.12.2022 வரை  பிரச்சாரம் மேற்கொள்ளப்பட  உள்ளது.

scroll to top