சிறுவர்களுக்கான தடுப்பூசி கோர்பேவேக்ஸுக்கு இந்தியாவில் அவசரகால அனுமதி

clipboard-57-1081622-1644891202.jpg

இந்தியாவில் 12 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்துவதற்காக ‘கோர்பேவேக்ஸ்’ என்ற புதிய கொரோனா தடுப்பூசியை பயாலாஜிக்கல் – இ எனும் நிறுவனம் தயாரித்திருந்தது. முழுக்க முழுக்க உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசியான கோர்பேவேக்ஸ், சோதனைக்காக இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்புக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு அனுப்பி வைக்கப்பட்டது. இதையடுத்து, பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு, கோர்பேவேக்ஸ் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டுக்கு இந்திய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு இன்று அனுமதி வழங்கியிருக்கிறது. இதனால், நாட்டில் விரைவில் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கும் விரைவில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

scroll to top