சிறிய மொச்சை விதையில் எம்.ஜி.ஆர் உருவத்தை வரைந்து அசத்திய கோவை பெண்

mgr.2jpeg.jpg

கோவை சிறுவாணி சாலை காருண்யா நகர், சின்மயா பள்ளி வளாகத்தில் வசிக்கும் ரேவதி சவுந்திரராஜன் என்பவர். எம்.ஜி.ஆரின் 35 வது நினைவு நாளை சிறப்பிக்கும் விதமாக எம்.ஜி.ஆரின்.உருவத்தை சிறிய மொச்சை விதையில் வரைந்து அசத்தியுள்ளார். மேலும் இது குறித்து தெரிவிக்கும் போது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் 35 வது நினைவு நாளை முன்னிட்டு சிறிய மொச்சை விதையில் 1 சென்டிமீட்டர் அளவில் அவரது படம் வரைந்துள்ளேன். எம்.ஜி.ஆர்.என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும், மேலும் எம்.ஜி.ஆர்.தொண்டர்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் இதை நான் சமர்ப்பிக்கின்றேன் என்று கூறினார்.

ரேவதி சவுந்திரராஜனின் திறமைக்கும் எம்.ஜி.ஆர் மீது அவர் கொண்டுள்ள பேரன்பிற்கும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து கௌரவித்துள்ளார்.  

scroll to top