சிம்ம வாகனத்தில் எழுந்தருளினார் சிவகாசி ஸ்ரீமாரியம்மன்

1.jpg

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. பொங்கல் திருவிழாவின் 5ம் திருவிழாவான நேற்று, ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.

தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. இதனையடுத்து, ஸ்ரீமாரியம்மன் சர்வபூரண அலங்காரத்தில் சிங்கம் வாகனத்தில் எழுந்தருளினார். மேளதாளங்கள் முழங்க, வாண வேடிக்கை நிகழ்ச்சிகளுடன் ஸ்ரீமாரியம்மன் வீதியுலாவாக சென்று கடைக்கோவிலுக்கு வந்து வெள்ளி ஊஞ்சலில் எழுந்தருளி காட்சி கொடுத்தார். நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

scroll to top