சிஎஸ்கே அணி தலைவராக ரவிந்திர ஜடேஜா அறிவிப்பு

MS-Dhoni-and-Ravindra-Jadeja.jpg

சிஎஸ்கே கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்த எம்எஸ் தோனி, மேலும் 2 சீசன்களுக்கு அணியில் தொடர்வார் என்று அணி நிர்வாகம் கூறியுள்ளது. ஐபிஎல் 2022ம் ஆண்டுக்கான  போட்டிகள் நாளை மறுதினம் (மார்ச் 26ந்தேதி) தொடங்க உள்ள நிலையில், திடீரென சிஸ்கே கேப்டன்ஷிப் மாற்றப்பட்டுள்ளது சிஎஸ்கே ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சிஎஸ்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், பல ஆண்டுகளாக அணியின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவிடம் எம்எஸ் தோனி கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளார் என தெரிவித்துள்ளது.

15வது ஐபிஎல் கிரிகெட் தொடர் வரும் 26ம் தேதி தொடங்கி மே 29ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் இடம்பெற்றுள்ளதால் போட்டிகளும் அதிகரித்துள்ளது. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள், 4 பிளே ஆப் போட்டிகள் நடைபெறுகின்றன. இதில், லீக் ஆட்டங்களுக்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. ஐபிஎல்2022ன் முதல் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில்  இரவு 7.30 மணிக்க தொடங்குகிறது. ஐபிஎல் 2022ம் ஆண்டின் முதல் போட்டியானது ஐபிஎல் 2022 வின்னர் சிஸ்கே அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்கள் அணிக்கும் இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தை சிஎஸ்கே ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் கேப்டன்ஷிப் மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே சின்னதல எனப்படும் ரெய்னாவை சிஎஸ்கே நிர்வாகம் ஏலத்தில் எடுக்க தவறியது, தோனி, ரெய்னாவுக்கு இடையே உள்ள ஈகோ மோதல் என விமர்சிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே அணி தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி வந்தன. அத்துடன், சிஎஸ்கே அணி குறித்து கூறும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, அம்பத்தி ராயுடு, ராபின் உத்தப்பா, வெய்ன் பிராவோ ஆகியோர் திறமையான வீரர்கள் என்றும், அவர்களால் சிஎஸ்கே  அணியை வழிநடத்த முடியும். கேப்டன்ஷிப்புக்குரிய திறமை இவர்களிடம் உண்டு. ஆட்டத்தை நன்றாக புரிந்து செயல்படக்கூடியவர்கள். டோனிக்கு பிறகு சென்னை அணியின் அடுத்த கேப்டனாக வர முடியும்’ என்று கூறியிருந்தார். ஜடேஜாவின் பேட்டி கிரிக்கெட் ரசிகர்களிடையே வியப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், தோனி, தனது கேப்டன்ஷிப் பதவியை ஜடேஜாவிடம் வழங்கி உள்ளார்.

scroll to top