சாலை விபத்தில் உயிரிழந்தோருக்கு தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு: பிரதமர் அறிவிப்பு

ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே நேற்று கார் மீது லாரி மோதியதில் காரில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில் விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டத்தில் நடந்த கோர விபத்தில் 9 பேர் உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு அனுதாபங்கள். பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும்’ என்று பதிவிட்டுள்ளார்.

scroll to top