காரியாபட்டி பகுதியில், சாலையோர மரக்கன்றுகள் நடும்பணி துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, பசுமை பாரதம் அறக்கட்டளை சார்பாக , காரியாபட்டி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் சுற்றுப் புறச்சூழல் பாதுகாப்பு க்காகவும், மழைவளம் பெருகி விவசாயம் செழிக்கவும், மரம் வளர்ப்பு பணியினை செய்யப்பட்டு வருகிறது .
மரம் வளர்ப்பின் அவசியம் குறித்து மாணவர்களிடம் விழிப்புனர்வு ஏற்படுத்தி, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் வளர்க்கப்படுகிறது . அனைத்து மத வழிபாட்டு தலங்கள், பொதுமக்கள் கூடுகின்ற பொது இடங்களிலும் மரம் வளர்ப்பு பணி செய்யப்படுகிறது . தற்போது, நெடுஞ்சாலை ஓரங்களில் மரங்கள் வளர்ப்பு பணி தொடங்கப்பட்டது காரியாபட்டி, திருச்சுழி சாலையில் ஒரங்களில் புளியமரங்கள் றுகள் நட்டுவைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், தொழிலதிபர் மோகன்தாஸ், பசுமை பாரதம் அறக்கட்டளை நிர்வாகி ஆசிரியர் பொன்ராம், அசேபா திட்ட மேலாளர் கேசவன், ஜசைத்தி பவுண்டேசன் நிறுவனர் சிவக்குமார், வழக்கறிஞர் செந்தில குமார், பசுமை பாரதம் அறக்கட்டளை உறுப்பினர்கள் ஜெயக்குமார் ராஜேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.