சாலையோரம் வசிப்பவர்களுக்கு, உணவு வழங்கிய நற்பணி மன்ற நிர்வாகிகள்

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பகுதியில், முழு ஊரடங்கு காரணமாக சாலையோரங்களில் வசிப்பவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு உணவு பொட்டலம் வழங்கும் பணியில் ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணிமன்ற நிர்வாகிகள் ஈடுபட்டனர். ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணி மன்றம் சார்பில், அரசு மகப்பேறு மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி பெண்கள், உள்நோயாளிகள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கும், பி.ஏ.சி.ஆர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் உள்நோயாளிகள், செவிலியர்கள் மற்றும் சாலையோரங்களில் வசித்துவரும் ஆதரவற்றவர்கள், புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையப் பகுதிகளில் வசித்துவருபவர்கள் என சுமார் ஆயிரம் பேருக்கு, காலை உணவாக உப்புமா மற்றும் ரொட்டி வகைகளும், மதிய உணவாக சாம்பார் சாதம், தக்காளி சாதம், வாழைப்பழமும், இரவு உணவாக இட்லி மற்றும் சப்பாத்தியும் வழங்கப்பட்டது. ஸ்ரீமாப்பிள்ளை விநாயகர் நற்பணிமன்ற தலைவர் ராம்ராஜ் தலைமையில், நற்பணி மன்ற நிர்வாகிகள் உணவு பொட்டலங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

scroll to top