சாலையில் சங்கமம் ஆகும் கழிவுநீர்

WhatsApp-Image-2023-05-01-at-18.46.45.jpg

சாக்கடை வசதி இல்லாததால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீட்டுக்குள் செல்லும் அவலம் நிலை காணப்படுவதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா, சிலுக்குவார்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் உரிய சாக்கடை வசதியும், சாக்கடை நீர் செல்ல வசதி இல்லாததால் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வீடுகளுக்குள் போகும் அவலம் நிலவுகிறது.
சாக்கடை நீர் மற்றும் கழிவு நீரை வெளியேற்ற சிலுக்குவார் ரொட்டி ஊராட்சி மன்றத் தலைவரிடம் பலமுறை மனு அளித்தும், எவ்வித பயணம் அளிக்கவில்லையாம். அந்த சூழ்நிலையில், மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து வீட்டுக்குள் செல்வதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாக்கடை கலைவு நீர் வீட்டிற்குள் புகாத வண்ணம் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

scroll to top