“சாதி மதம் எல்லாம் தப்பு; எல்லாருமே நண்பர்கள்தான்” என்று கூறிய அப்துல் கலாமை பாராட்டிய முதல்வர்

சமீபத்தில்  வெளியான இணையதள ஊடக வீடியோவில், பள்ளிச் சிறுவன் ஒருவன் மனித நேயம் குறித்து தெளிவுடன் அழகாக பேசியிருந்தான். அப்போது, சாதி மதம் எல்லாம் தப்பு; எல்லாருமே நண்பர்கள்தான் என்று மனிதநேயம் குறித்து கூறியிருந்தார். இந்தவீடியோ வைரலானது.

இந்த வீடியோவை பகிர்ந்த, தி.மு.க எம்.பி கனிமொழி உள்ளிட்ட பலரும் சிறுவனை பாராட்டி வந்தனர். இதுகுறித்து விசாரித்தறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த சிறுவனின் குடும்பம் குறித்து விசாரித்து அறிந்தார். அப்போது,  சென்னை கண்ணகி நகரில் வசிப்பதாகவும், இச்சிறுவனின் பெயர் அப்துல் கலாம் என்றும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த சிறுவன் சிறுவன் அப்துல் கலாமை  தலைமைச் செயலகத்திற்கு அழைத்து வரச்செய்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தினார். அப்போது,  அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கியுள்ளார். அப்போது அந்த சிறுவனுடன்,  தனது பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். அதுமட்டுமல்லாது சிறுவனின் பெற்றோருக்கும் தனது பாராட்டை முதலமைச்சர் தெரிவித்தார்.

scroll to top