சாக்கடையை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது உயர் நீதி மன்றம் உத்தரவு

260px-Chennai_High_Court.jpg

கழிவு நீர் தொட்டிகள், பாதாள சாக்கடைகளை சுத்தம் செய்ய மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.கழிவு நீர்த் தொட்டிகள், சாக் கடையில் இறங்கி வேலை செய்வதால் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் உரிய நிவாரணம் பெறுவதை உறுதிசெய்ய வேண்டும் என பல கோரிக்கைக ளுடன்சென்னை உயர் நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசா ரணைக்கு வந்தது அப் போது நீதிபதி கள் பிறப்பித்த உத்தரவில் கழிவுகளை அகற்றும் பணியில் இதுநாள்வரை ஈடுபட்டவர்களுக்கு, மாற்று வேலை உள்ளது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பாதாள சாக்கடைகளில் கழிவுகளை அகற்றும்போது பலியானவர்களுக்குவழங் கப்படும் ரூ.10 லட்சம் இழப்பீடு போதாது என்பதால் அதை அதிகரித்து வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.கழிவுகளை மனிதர்கள் அகற்றும் இந்த நடைமுறையை முழுமையாக ஒழிக்க அர்த்தமுள்ள நடவடிக்கை களையும், மனிதர்களை ஈடுபடுத்துவோருக்கு அப ராதம் விதிப்பதற்கான வழிவகைகளையும் அரசு உருவாக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை தள்ளி வைக்கிறோம். இவ்வாறு கூறியுள்ளனர்.

scroll to top