சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் – கமல்ஹாசன் பேட்டி

ka.webp

​சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

முதலமைச்சர் ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி அமைச்சர் சேகர்பாபுவின் ஏற்பாட்டில் சென்னையில் புகைப்பட கண்காட்சியை மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். கண்காட்சியை திறந்து வைத்த பிறகு கமல்ஹாசன் கூறியதாவது, “கருணாநிதி மகன் ஸ்டாலின் என்ற காலத்தில் இருந்து அவருடன் எனக்கு நட்பு இருந்தது. ஒரு பெரிய தலைவருக்கு மகனாக இருப்பதில் சந்தோஷம் நிறைய உண்டு என்றாலும், சவால்களும் நிறைய உண்டு. சந்தோஷத்தையும் அனுபவித்து, சவால்களையும் ஏற்று படிப்படியாக உயர்ந்தவர் மு.க.ஸ்டாலின். இது அவரின் பொறுமையை மட்டுமல்ல, திறமையையும் காட்டுகிறது. தன் திறமையால் தன்னை நிரூபித்து இந்த நிலைக்கு வந்துள்ளார். ” என்று கூறினார்.

scroll to top