சர்வதேச விமான சேவைக்கான தடை பிப். 28 வரை நீட்டிப்பு: மத்திய அரசு

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது ஒமைக்ரான் கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு ஒத்திவைத்து ஜனவரி 2022 வரை தடை நீடிக்கும் என தெரிவித்திருந்தது. இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை 2022 பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top