இந்தியாவின் பாரம்பரியமான யோகாசனம், வெளிநாட்டு மக்களிடையே மிகவும் பிரபலமாகியது. யோகாசனப் பயிற்சிகளின் முக்கியத்துவத்தை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஜூன் மாதம் 21 ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது இதை முன்னிட்டு கோவை இந்துஸ்தான் கல்லூரியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் யோகா பயிற்சியாளர்களுக்கு நினைவு பரிசு கொடுத்து கவுரவ படுத்தப்பட்டது. இதில் பல்வேறு யோகா பயிற்சி மையங்களில் இருந்து பலர் கலந்துக்கொண்டனர். மேலும் பாஜக மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி, மற்றும் பாஜக நிர்வாகிகள் சபரிஷ், தேவராஜ் பழனிசாமி, டி.ஆர் குமரன், கவிதா ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சர்வதேச யோகா தினம்
