சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு – தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் ஓய்வு

MURALI-VIJAY.jpg

​சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தமிழக கிரிக்கெட் வீரர் முரளி விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முரளி விஜய் இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளிலும், 17 ஒருநாள் போட்டிகளிலும்,  9 டி20 போட்டிகளிலும் ஆடியிருக்கிறார். ​​கடந்த சில ஆண்டுகளாக அவரை இந்திய அணி தேர்வு செய்யாத நிலையில், அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராக விளையாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

scroll to top