சர்வதேச அளவிலான `ஃபேஷன் ஷோ’வில் கலக்கப் போகும் கோவை சிறுவன்

rana-3-scaled.jpg

கோவை வண்ணமயமான அழகிய ஆடை, ஸ்டைலிஷான நடை, தீர்க்கமான பார்வை, பார்வையாளர்களைக்கி றங்க வைக்கும் அழகு… இந்த வர்ணனையெல்லாம் ஐஸ்வர்யா ராய் போற அழகிகளைக் குறிக்க வில்லை. கோவையைச் சேர்ந்த ஆறரை வயது சிறுவன் ராணா சிவக்குமாருக்குத் தான் இந்த வர்ணனைகள்.
அதுமட்டுமல்ல. துபாயில் நடைபெற உள்ள சர்வதேச அளவிலான ஜூனியர் ஃபேஷன் ஷோவின் இறுதிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள, தமிழகத்தைச் சேர்ந்த மு தல் சிறுவனும் ராணா சிவக்குமார்தான்.இச்சிறுவனின் தந்தை சிவக்குமார். கோவை ராம் நகரைச் சேர்ந்த இவர் டெக்ஸ்டைல் தொடர்பு டைய வியாபாரி. தாயார் கோமதி. நேச்சுரல்ஸ் என்ற பெயரில் அழகுநிலையம் நடத்தி வருகிறார். இவர்க ளது மகன் ராணா சிவக் குமார், கோவை ஜி.டி. பள்ளியில் முதல் வகுப்பு படித்து வருகிறார்.
மூன்று வயதிலிருந்தே ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வரும் ராணா சிவக்குமார், தற்போது மாடலிங், விளம்பரம் மற்றும் குறும்படங்களில் நடிப்பது என அசத்தி வருகிறார்.
3 வயதினிலே…
அவரது தந்தை சிவக்குமாரி டம் பேசினோம். “சில ஆண்டுகளுக்கு முன் மனைவியின் அழகு நிலை யத்துக்கு வந்த ஃபேஷன் டிசைனர் ஒருவர், எனது மகனைப் பார்த்துவிட்டு, இவன் ஃபேஷன் ஷோ வுக்கு ஏற்றாற்போல இருக்கிறான்.ஏன் இவனை ஃபேஷன் ஷோவுக்கு அனுப்பக் கூடாது என்று கேட்டார். அப்போது ராணாவுக்கு வயது 3-தான்.
முதலில் கொஞ்சம் தயக்கம் இருந்தாலும், பின்னர் ராணாவை அதில் பங்கேற்கச் செய்தோம். கோவையில் நடைபெற்ற ஃபேஷன் ஷோவில் பங் கேற்ற ராணா, முதல் பரி சைப் பெற்றான். இது பெரிதும் ஊக்குவித்தது. தொடர்ந்து பெங்களூரு, கோவை,சேலம், சென்னை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற ஜூனியர் ஃபேஷன் ஷோக்களில் ஆர்வமுடன் பங்கேற்றான். தேசிய, மாநில அளவி லான போட்டிகளில் வென்று, இதுவரை 15-க்கும் மேற்பட்ட மெடல்களையும், விருதுகளையும் குவித்துள் ளான்.அதேபோல,கோவாவில் நடைபெற்றஃபேஷன் ஷோவிலும் கலந்து கொண்டு, விருது வாங்கி னான். வரும் 23, 24, 25, 26-ம் தேதிகளில் துபாயில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஜூனியர் ஃபேஷன் ஷோவில் ராணா பங்கேற்கிறான். சுமார் 15 நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
தமிழகத்திலிருந்து முதல்முறையாக…
இதுவரை வெளி மாநில ங்களைச் சேர்ந்தவர் கள்தான் இதில் கலந்து கொண்டிருக்கிறார்கள். முதல்முறையாக தமிழக த்திலிருந்து இதில் பங் கேற்க ராணா தேர்வு செய்யப்பட்டுதுள்ளது பெருமைக்குரியது.ஃபேஷன் ஷோவில் வண்ணமயமான, அழகான ஆடையணிந்து நடப்பது மட்டும் அல்ல. நடுவர்களின் கேள்விகளுக்கு சிறப்பாக பதில் அளிப்பதும், தனித் திறமையை வெளிப் படுத்துவதும் அவசியம். அந்த வகையில், தனித் திறமைக்காக சிலம்பம் கற்றுவருகிறான் ராணா. அதேபோல, வெளி நாட்ட வர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசவும் கற்றுக் கொடுத்து வருகி றோம்.மூன்று வயது முதலே மாடலிங் செய்து வரும் ராணா, தன்னைத் தானே செதுக்கிக் கொண்டான். பல வீடியோக்களையும், நேரிலும் ஃபேஷன் ஷோக்களை பார்வையிட்டு, அதில் மேம்படுத்திக் கொண்டான்.
சிலம்பத்திலும் அசத்தல்..
தற்போது மற்ற சிறுவர்க ளுக்கு கற்றுக் கொடுக்கும் அளவுக்கு தேறிவிட்டான். எப்படி பார்க்க வேண்டும், எப்படி நடக்க வேண்டும், எப்படி நிற்க வேண்டும், எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் சிறுவர்களுக்குகற்றுக் கொடுத்து வருகிறான். தமிழகத்தின் பாரம்பரி யக் கலையான சிலம்பாட் டத்தையும் தீவிரமாக கற்று வருகிறான். நிறைய விளம்பரப் படங்களில் நடித்துள்ள ராணாவை, திரைப்பட இயக்குநர் செல்வராகவன் அழைத்துப் பாராட்டியுள்ளார். பல ரும் ராணாவுக்கு ஸ்பான் சர் செய்துள்ளனர். சர்வதேச அளவிலான போட்டியில் வென்றால், தமிழகத்துக்கு மட்டுமின்றி, இந்தியாவுக்கே பெருமை சேர்ப்பான் ராணா” என்றார் நம்பிக்கையுடன்.
மேக்அப் துறையில் பாரீஸும், ஃபேஷனுக்கு லண்டனும் பெயர்பெற் றவை. ராணாவின் வெற்றி ஃபேஷன், மாடலிங் துறையில் தமிழகத்தையும் குறிப்பிடத்தக்க இடத்தை அடையச் செய்யும். இந்த ஆறரை வயதிலேயே ஃபேஷன் ஷோ, மாடலிங், நடிப்புத் துறைகளில் அசத்தும் ராணாவுக்கு, மிகப் பெரிய எதிர்காலம் உள்ளது, கோவைக்கே பெருமை சேர்ப்பார் என்று வாழ்த்தி, சிவக்குமாரிடம் விடைபெற்றோம்.

scroll to top