சம்பளத்தை தானே முடக்கிய கலெக்டர்

ஊழல், லஞ்சம் போன்ற அரசு அதிகாரிகள் குறித்து செய்தி செய்திகள் வருவது வாடிக்கையாகி விட்ட நிலையில், மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் கரம்வீர் சிங் தன் சம்பளத்தை தானே முடக்கியுள்ளது மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. 2010ம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணியில் தேர்வான இவர் தன் பணியை திறம்பட புரிந்து வருகிறார். இந்நிலையில், மக்கள் புகார்களில் அதிகாரிகள் 100 நாட்கள் தாண்டியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், தண்டனையாக பல உரிய அதிகாரிகளின் சம்பளத்தை முடக்கவும் ஆண்டு சம்பள உயர்வை நிறுத்தி வைக்கவும் அவர் பரிந்துரைத்துள்ளார். இதைத்தொடர்ந்து, இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தன் கீழ் உள்ள அதிகாரிகள் சரியாக செயல்படாததற்கு தானே தார்மீக பொறுப்பேற்று தன் சம்பளத்தையும் முடக்கி வைக்க மாவட்ட கருவூலத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும்,100 நாட்களுக்கும் மேலாக நிலுவையில் உள்ள மக்களின் புகார்களுக்கு இம்மாத முடிவுக்குள் தீர்வு காண அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

scroll to top