சதுரங்க வீரர் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் பாராட்டு

R-Praggnanandhaa-fb.webp

சதுரங்க விளையாட்டில் மிகவும் புகழ்பெற்ற வீரர் மஃக்னஸ் கார்ல்சன் ஆவார்,  இவர் உலக கிராண்ட் மாஸ்டர்களில் ஒருவர் ஆவார்.  இவருக்கு இந்தியாவைச் சேர்ந்த 16 வயது கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவுக்கும் இடையில் சதுரங்க போட்டி நடந்தது. இதில் 31 வயதான மஃக்னஸ் கார்ல்சன் உடன் 16 வயதான பிரக்ஞானந்தா போட்டியிட்டு  39 ஆம் மூவில் வெற்றி பெற்றார்.  இதனால் பிரக்ஞானந்தாவை உலக அளவில் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

இதன் தொடர்சியில், தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தனது டிவிட்டரில்,

சூப்பர் கம்ப்யூட்டரையே தோற்கடித்த  தான் பார்த்து வியந்த உலகின் சிறந்த #Chess ஆட்டக்காரரான கார்ல்சனை வீழ்த்தி ஒட்டுமொத்த உலகையே திகைப்பில் ஆழ்த்தியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயது #GrandMaster @rpragchess -க்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மென்மேலும் வெற்றிகள் குவியட்டும்.”

எனப் பதிந்து பாராட்டியுள்ளார்.

scroll to top