“கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும்”நிர்மலா சீதாராமன்

WhatsApp-Image-2022-05-09-at-2.48.28-PM-e1652092412306.jpeg

தி ஸ்டார்ட் அப்ஸ் அகாடமி’ சார்பில் தொழில் முனைவோருக்கு ‘ஸ்டார்ட் அப் துருவ்’ விருது வழங்கும் விழா கோவையில் இன்று நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வரும் 44 நிறுவனங்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விருதுகளை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில் ஸ்டார்ட் அப் அகாடமி தலைவர் கார்த்திகேயன், எல்.எம். டபிள்யு தலைவர் சஞ்சய் ஜெயவர்த்தனவேலு, கோவை சட்டமன்ற உறுப்பினர்  வானதி சீனிவாசன், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை,  மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில் 2021ம் ஆண்டு பட்ஜெட்டில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு என தனியாக இடம் கிடையாது என அறிவிக்கப்பட்டது. நாட்டு நலனுக்காக சில இடங்களில் பொது துறை நிறுவனங்கள் இருக்கும். எல்லா இடங்களிலும் தனியார் துறை அனுமதிக்கப்பட்டுள்ளது.தேசிய பாதுகாப்பு தொடர்புடைய விவரங்கள்  தவிர தனியாருக்கு எங்கு வாய்ப்பு கிடைத்தாலும்  அங்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து வருகிறது. கோவை ஸ்டார்ட் அப் துறையில் முன்னோடியாக இருக்க வேண்டும். தமிழகத்தில்  தொழில் முனைவோர்களுக்கு உகந்த மாவட்டமாக  கோவை உள்ளது. பெங்களூர், குருகிராம், ஹைதராபாத் போன்ற நகரங்கள் ஸ்டார்ட்அப் நகரங்களாக உள்ளன கோவையும் ஸ்டார்ட் அப் நகராக வளரும் . இவ்வாறு அவர் பேசினார்.

scroll to top