கோவை விமான நிலையத்தில் 5 மாதங்களில் 7,382 விமானங்கள் இயக்கம்  

airplane-windows-e1646745598662.jpg

Air Vehicle, Commercial Airplane, Flying, Clouds

கோவை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஐந்து மாதங்களில் மட்டும் 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
கோவை உள்பட சுற்றுப்புற 7 மாவட்ட மக்களுக்கு பயன் அளித்து வருகிறது கோவை சர்வதேச விமான நிலையம். கரோனா நோய்தொற்று பரவல் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து கடந்த சில மாதங்களாக விமான போக்குவரத்து மெல்ல மீண்டு வர தொடங்கியுள்ளது. தினமும் 24 விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தவிர அட்டவணையில் இல்லாத  தனியார் விமானங்கள் மற்றும் முப்படைகளுக்கு சொந்தமான விமானங்கள் உள்ளிட்ட பல விமானங்கள் கோவை விமான நிலையத்தில்  இயக்கப்படுகின்றன. 
கடந்த 2021-22 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 3127 விமானங்களும் சர்வதேச பிரிவில் 131 விமானங்களும் என 3,258 விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டன.
நடப்பாண்டு 2022-23 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் உள்நாட்டு போக்குவரத்து பிரிவில் 6,862 விமானங்களும், சர்வதேச பிரிவில் 520 விமானங்களும் என 7,382 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.  
கடந்த 2021 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 874 விமானங்கள் இயக்கப்பட்டன. நடப்பாண்டு 2022 ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1,460 விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.
கோவை விமான நிலைய அதிகாரி்கள் கூறுகையில்,கோவை மட்டுமின்றி நாடு முழுவதும் அனைத்து விமான நிலையங்களிலும் விமான போக்குவரத்து நிலையான வளர்ச்சி காணப்படுகிறது. தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என எதிர்வரும் மாதங்களில் விழாகாலம் வரவிருப்பதால் விமானங்கள் மற்றும் பயணிகள் எண்ணிக்கையும் பல எதிர்வரும் மாதங்களில் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்றனர்.

scroll to top