கோவை மாமன்ற பட்ஜெட் கூட்டம்

corp.jpeg

கோவை விக்டோரியா ஹாலில், வெள்ளிக்கிழமை 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டம் நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பட்ஜெட் கூட்டத்தில், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் மற்றும் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். பட்ஜெட் அறிக்கையை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்த்குமார் வாசித்தார். இதில் மாநகராட்சி வருவாய் 3,018.90 கோடி என்றும், செலவினம் ரூ.3,029.07 கோடி என்றும், வருவாய் பற்றாக்குறை ரூ.10¼ கோடி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top