கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக ஆனந்த ஆரோக்கியராஜ் பொறுப்பேற்பு

police.jpeg

​கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையராக ஆனந்த ஆரோக்கியராஜ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கோவை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு உதவி ஆணையராக இருந்த பிரபாகரன் பதவி உயர்வு பெற்று பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனை அடுத்து இந்த பொறுப்பு சிறப்பு நுண்ணறிவு பிரிவு (எஸ்.ஐ.சி) உதவி ஆணையராக பதவி வகித்து வரும் மகேஸ்வரனுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி-யாக பணியாற்றி வந்த ஆனந்த் ஆரோக்கியராஜ் கோவை மாநகர காவல் துறையின் நுண்ணறிவு பிரிவில் உதவி கமிஷனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து வியாழக்கிழமை ஆணையர் அலுவலகத்தில் அவர் புதிய உதவி ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

scroll to top