கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக இருந்த சிலம்பரசன் தற்போது நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக மாறுதலாகி சென்றுள்ளார். இவருக்கு பதிலாக கோவை தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக சண்முகம் நியமிக்கப்பட்டு திங்கட்கிழமை காலை பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் இதற்கு முன் சென்னையில் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி.யாக பணியாற்றினார். இவர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். இவருக்கு உதவி போலீஸ் கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் காவல் அமைச்சுப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாநகர தெற்கு பகுதி போலீஸ் துணை கமிஷனராக சண்முகம் பதவியேற்பு
