கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் இடையே மோதல்! அதிமுக வெளிநடப்பு.

vlcsnap-2022-04-11-17h54m34s200-copy-e1649688057895.jpg

கோவை விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா தலைமையில் மாமன்ற கூட்டம் மாநகராட்சி ஆணையர் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் அதிமுக மாமன்ற உறுப்பினர்களான சர்மிளா சந்திரசேகர், பிரபாகரன், ரமேஷ் ஆகியோர் தமிழக அரசின் சொத்து வரி உயர்விற்கு கண்டனம் தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். கூட்டம் நடைபெறுவதர்க்கு முன்பு விக்டோரியா ஹாலில், மூவரும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் அதிமுக ஆட்சி குறித்து விமர்சித்தனர். அப்போது அதிமுக மாமன்ற உறுப்பினர் பிரபாகரன்,திமுக வரி விதிப்பு குறித்து பேசினார். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டு திடீரென தள்ளி விட்டதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து  அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

scroll to top