மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாநகராட்சி மாமன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் 52 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆமி (எ) கே. மருதாச்சலம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம், மற்றும் மாநகராட்சி சிறுவர் பூங்கா கட்டண உயர்வு, மற்றும் துப்புரவு ஒப்பந்த தொழிலாளர்கள் சம்பள உயர்வு, உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உடன், துணை மேயர் ஆர். வெற்றிசெல்வன் மற்றும் மாநகராட்சி ஆணையர் எம்.பிரதாப் ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்திற்கு முன்பு அதிமுக கவுன்சிலர்கள் ஆர். பிரபாகரன் மற்றும் கோவைப்புதூர் ரமேஷ், வெள்ளலூர் குப்பை கிடங்கில் நடைபெற்ற முறைகேட்டை கண்டித்து மாநகராட்சி மாமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.