கோவை-பொள்ளாச்சி ரயில் சேவை 17 மாதங்களுக்குப் பிறகு தொடக்கம்

ஏறத்தாழ 17 மாதங்களுக் குப் பிறகு கோவை-பொள் ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கியுள்ளது.
கோவை போத்தனூர் -பொள்ளாச்சி ரயில் வழித் தடத்தில் மின்மயமாக்கல் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், ரயில்வே அதிகாரிகள் போத்தனூர் -பொள்ளாச்சி இடையே ரயில் இன்ஜினை இயக்கி சோதனை நடத்தினர்.இந்நிலையில், பயணிகளின் கோரிக்கையைஏற்று, கோவையில் இருந்து போத்தனூர், கிணத்துக் கடவு வழியாக பொள்ளாச் சிக்கு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:கோவையில் இருந்து மாலை 6.15 மணிக்குப் புறப்படும் இந்த முன்பதிவு இல்லாத விரைவு ரயில் (எண்.06419) இரவு 7.45 மணிக்கு பொள்ளாச்சியை அடையும். சனிக்கிழமை களில் மட்டும் இந்த ரயில் இயக்கப்படாது. அதே போல, பொள்ளாச்சியில் இருந்து திங்கள்கிழமை முதல் காலை 7.25 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லா விரைவு ரயில் (எண்.06420) காலை 8.40 மணிக்கு கோவை வந்தடையும். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் இந்த ரயில் இயங்காது.ஏறத்தாழ 17 மாதங்களு க்குப் பிறகு கோவை-பொள்ளாச்சி இடையே ரயில் சேவை தொடங்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல, பொள்ளாச்சி யில் இருந்து ஞாயிற்றுக் கிழமை முதல் இரவு 8.50 மணிக்குப் புறப்படும் ரயில் (எண்.06732) 10.30 மணிக்கு பாலக்காடு சென்றடையும். இதேபோல, பாலக்காட்டில் இருந்து திங்கள்கிழமை முதல் அதிகாலை 4.55 மணிக்குப் புறப்படும் ரயில் (எண்.06731) பாலக்காடு டவுன், புதுநகரம், கொல்லங் கோடு, மீனாட்சிபுரம் வழியாக காலை 6.30 மணிக்கு பொள்ளாச்சியை வந்தடையும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

scroll to top