கோவை பா.ஜ.க மாவட்ட தலைவர் கைது : மறியலில் ஈடுபட 500 க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கைது

Pi7_Image_sample2.jpg

இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தின் போது தி.மு.க எம்.பி ஆ.ராசாவையும்  , தி.மு.க.,வையும்  கண்டித்து பேசியதற்காக   பா.ஜ.க கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமியை காவல்துறையினர் இன்று காலை கைது செய்தனர். அவர் மீது இரு தர்ப்பினரிடையே மோதலை உருவாக்கும் விதமாக பேசுதல் (153 ஏ) மற்றும் ஐ.பி.சி 504, 505 என்ற மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி  அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிட்டார். இதை கண்டித்து பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்  இதனால் காலை முதல்  கோவையில் ஒரு பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிளமேடு காவல்நிலையம் முன்பு பாஜகவினர் மறியலில் ஈடுபட்டதால் காவல்துறையினர் பாஜக நிர்வாகிகள் பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இதன் காரணத்தால் பாஜகவினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் ஆ.ராசாவின் உருவபொம்மையை எரித்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாநில பொருளாளர் எஸ் ஆர் சேகர் ,  மாநில  பொதுச்செயலாளர்  முருகானந்தம் , முன்னாள் மாவட்டத் தலைவர் நந்தகுமார், பாஜக நிர்வாகிகள் ரமேஷ் குமார்,டி.ஆர் குமரன், ராஜரத்தினம், மகளிர் அணியினர் மற்றும் பாஜக நிர்வாகிகள் என பலர் கைது செய்யப்பட்டனர்.

scroll to top