கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் போலீசாருக்கு 61வது தடகள விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மண்டலங்களுக்கு இடையேயான போலீசாருக்கான 61வது தடகள விளையாட்டு போட்டிகள் நேரு விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது போட்டிகளை ஆயுதப்படை கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் தொடங்கி வைத்து வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்

இந்த போட்டிகள் இன்று தொடங்கி 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது மொத்தம் ஏழு பிரிவுகளாக ஆயுதப்படை போலீசார் கிரேட் சென்னை நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் ஜோன் சென்ட்ரல் ஜோன் கமாண்டோ உட்பட ஏழு பிரிவுகளாக மொத்தம் 450 வீரர் வீராங்கனைகள் போட்டிகளில் கலந்து கொண்டனர் இந்த போட்டி தொடக்க விழாவில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பிரதீப்குமார் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் கோவை மாநகர துணை ஆணையாளர்கள் ஜெயச்சந்திரன் மற்றும் உமா சென்னை டிஐஜி எழிலரசன் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்

இன்று 800 மீட்டர் போட்டதுடன் போட்டிகள் துவங்கியது அதனைத் தொடர்ந்து பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டம் குண்டு எறிதல் உயரம் தாண்டுதல் கம்பு ஊன்றி தாண்டுதல் சுற்றி எறிதல் 400 மீட்டர் 110 மீட்டர் நீளம் தாண்டுதல் 3000 மீட்டர் தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் இன்று நடைபெறுகிறது

scroll to top