கோவை நீலகிரியில் 3 நாள் முகாமிட்ட முதல்வர்: பின்னணி அரசியல் என்ன?

Pi7compressedooo.jpg

THE KOVAI HERALD 

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 3 நாள் பயணமாக கோவை மற்றும் நீலகரி மாவட்டங்களுக்கு வந்தார். 19-ம்தேதி காலை கோவை வஉசி மைதானத்தில் ‘பொருநை’ அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார். கோவை: வ.உ.சி., மைதானத்தில் பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனை ஓவிய கண்காட்சியை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிட்டார். தமிழ்நாடு தொல்லியல் துறையால் மேற்கொண்ட அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள நெல்மணிகளின் காலம் கி.மு., 1155. தண் பொருநை என்று அழைக்கப்பட்ட தாமிரபரணி ஆற்றங்கரை நாகரிகம், 3,200 ஆண்டுகளுக்கு முற்பட்டது போன்ற விவரங்கள் இங்கே காட்சிப்படுத்தப்பட்டிருந்த தோடு, முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்த போது எடுத்த படம் ஓவியமாக இடம் பெற்றிருந்தது. அதை கவனித்த முதல்வர், அமைச்சர் தங்கம் தென்னரசுவை அழைத்து காண்பித்தார். இதனைத் தொடர்ந்து தனியார் விடுதியில் தொழில் துறையினருடன் ஆலோசனை நடத்தினார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 3 மாவட்ட தொழில் துறையினர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத் தில் இரண்டாவது பெரிய நகரம் என்னவென்று கேட்டீர்களென்றால் அது கோவை மாநகரம் தான். ஜவுளி, பொறியியல், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு, மோட்டார் பம்புகள், வெட் கிரைண்டர், தங்க நகை மற்றும் ஆபரணக் கற்கள் உற்பத்தி என அனைத்துத் தொழில்களிலும் சிறந்த நகரம் இந்த கோவை நகரம் தான். இந்தத் தொழில்தான் என சொல்லாமல், பல்வேறு தொழில்களின் மையமாக இந்தக் கோவை இருக்கிறது. கோவை மக்கள் தொடாத துறையும் இல்லை, அவர்கள் தொட்டு துலங்காத துறையும் இல்லை என்ற பெயரை பெற்ற நகரம் இந்தக் கோவை. கோயம்புத்தூரில் 700-க்கும் மேற்பட்ட வெட் கிரைண்டர் உற்பத்தியாளர்கள் பல் வேறு வகையான வெட் கிரைண்டர்களை தயாரித்து இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் பல ஆண்டுகளாக ஏற்றுமதி செய்து கொண்டிருக்கிறீர்கள். இவற்றுக்கு ‘கோயம்புத்தூர் வெட் கிரைண்டர்’ என புவிசார் குறியீடுm வழங்கப்பட்டுள்ளதே இதன் பெருமைக்கு சிறந்த சான்றாக அமைந் திருக்கிறது. தற்போது தகவல் தொழில்நுட்பத் துறையிலும் இந்த மாவட்டம் மிக வேகமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கிறது!’ என்று கோவையின் தொழில் பெருமைக்கு ஏராளமான சான்றுகளை சொல்லி விளக்கிய முதல்வர், அதில் திமுக ஆட்சிகாலத்தில் செய்த பணிகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். தொடர்ந்து நீலகிரி சென்று மலர்கண்காட்சி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அடுத்தநாள் கோவை திரும்பி, சென்னை புறப்பட்டுச் சென்றார். கோவையில் ஒரு எம்.எல்.ஏ. சீட் கூட திமுகவிடம் இல்லை. இந்த ஊரைச் சேர்ந்த அமைச்சர்களும் இல்லை. அதற்கு நேர்மாறாக கடந்த உள்ளாட்சித் தேர்தலில் இமாலய வெற்றியை திமுகவிற்கு கோவை மக்கள் கொடுத்தார்கள். அதை முன்னிட்டும் எந்த முக்கிய நிகழ்ச்சியும் இல்லை. அப்படியிருக்க முதல்வர் ஸ்டாலின் மூன்று நாட்கள் கோவை, நீலகிரியில் தங்கி நிகழ்வுகளில் கலந்து கொள்ள என்னதான் முக்கிய காரணம்? என்று கேட்டால் திமுக உடன்பிறப்புகளே, ‘எங்களுக்கு எதுவும் தெரியவில்லை!’ என்று உதடுபிதுக்குகிறார்கள். எதிர்கட்சிகளோ, ‘‘கோவை தொழிலதிபர்கள் அதிமுக, பாஜகவுடனே இணக்கமாக இருக்கிறார்கள். குறிப்பாக மத்திய பாஜக அமைச்சர்கள் தமிழகம் எப்போது வந்தாலும் கோவைக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். அதிலும் அவர்கள் தொழில் முனைவோர் சந்திப்புகளை நடத்துவது அன்றாட வழக்கமாகி விட்டது. அதை தன் வசப்படுத்த வேண்டும் என்ற காரணம் கூட இதற்கு இருக்கலாம்!’’ என்கிறார்கள் இருந்தாலும் ஊட்டியில் எப்போது வந்தாலும் ஸ்டார் ஓட்டலில் தங்கும் ஸ்டாலின் இப்போது தமிழக அரசு மாளிகையில் தங்கியது பலரையும் புருவம் உயர்த்த வைத்திருக்கிறது. 

S.KAMALAKANNAN Ph. 9244319559  

scroll to top