கோவை கோனியம்மன் கோவில் ​​தேரோட்டம் – ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்து இழுத்தனர்

car3.jpeg

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் புதன்கிழமை மதியம் நடைபெற்றது.  இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். 

கோவை மக்களின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர் திருவிழா பிப்ரவரி மாதம் 14-ந் தேதி காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. மார்ச் 1-ந் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் புதன்கிழமை மதியம் னடைபெற்றது. 

ராஜவீதி தேர் திடலில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கோனியம்மன் கோவில் தேர் ராஜவீதி, ஒப்பணக்கார வீதி, கருப்பக் கவுண்டர் வீதி, வைசியாள் வீதி வழியாக மீண்டும் தேர் திடலை வந்தடைந்தது. மார்ச் 6-ந் தேதி வசந்த விழாவுடன் தேர் திருவிழா நிறைவடைகிறது

scroll to top