கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் ஜமேசா முபின் என்பவர் உயிரிழந்த நிலையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கு தற்போது NIA விசாரித்து வருகின்றனர். இதனிடையே கார் வெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோயிலுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்த பல்வேறு நிர்வாகிகளும் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு அனைத்து ஜமாத் நிர்வாகிகள் சென்று அங்குள்ள பூசாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஜமாத் நிர்வாகிகள்
