தென்னிந்தியாவின் முன்னணி பல்துறை மருத்துவமனை களில் ஒன்றான கேஎம்சிஎச் மருத்துவமனைக்கு 2019ஆம் ஆண்டு தரமான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு மருத்துவ கல்லூரி துவக்கப்பட்டது. இந்த கல்லூரி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலை கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது தற்போது இந்த மருத்துவ கல்லூரி வளாகத்தில் 750 படுக்கை வசதியுடன் புதிய பொது மருத்துவமனை அனைத்து நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது ,கே.எம்.சி.எச் மருத்துவமனை தலைவர் டாக்டர் நல்லா ஜி பழனிச்சாமி அவர்கள் துவக்கி வைத்தார். துவக்க விழாவில் கே.எம்.சி.எச் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் என் பழனிசாமி முன்னிலை வகித்தார். இவ்விழாவில் கே.எம்.சி.எச் மருத்துவமனை துணை தலைவர் தவமணி டி பழனிசாமி அவர்களுடன் மருத்துவமனை இயக்குனர்கள், மருத்துவர்கள்,செவிலியர்கள்,மருத்துவப் பணியாளர்கள் மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர். மேலும் கே.எம்.சி.எச் மருத்துவ கல்லூரியின் ஒரு பகுதியாக செயல்படும் இந்த மருத்துவமனை ஏழைகளுக்கு பயன்படும் வகையில் மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார். 30 ஆண்டுகால மருத்துவ சேவை பயணத்தில் இது மற்றொரு சாதனை என்றும் அனைத்து தரப்பு மக்களும் தரமான மருத்துவ சேவைகள் கிடைக்க கே.எம்.சி.எச் தன்னை அர்ப்பணித்துக் கொள்கிறது என்றும் அவர் தெரிவித்த. 750 பொது படுக்கை வசதி கொண்ட இப்புதிய பொது மருத்துவமனையில் 50 படுக்கைகள் பல்வேறு தீவிர சிகிச்சை பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ளது 30 படுக்கைகள் அவசரகால விபத்து சிகிச்சைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது மேலும் 11 ஆபரேஷன் தியேட்டர்களில் உள்ளன என்றும் .இந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான மருத்துவ சேவைகள் அனைத்தும் ஓரிடத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காக சிடி ஸ்கேன், எம்,ஆர்,ஐ, அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, போன்ற நவீன வசதிகளுடன் அனைத்து வசதிகள் கூடி ஆபரேஷன் தியேட்டரில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது கேஎம்சிஎச் மருத்துவக் கல்லூரி பொது மருத்துவமனை பொதுமக்கள் வசதிக்காக 24 மணி நேரமும் செயல்படும் அவினாசி சாலையில் இருந்து தனிவழி அமைக்கப்பட்டுள்ளது கேஎம்சிஎச் பிரதான மருத்துவமனையில் இருந்து தனித்து செயல்படும் பொதுமக்கள் அனைவரும் இந்த மருத்துவ சேவைகளை பெற்று பயன்படுமாறு அவர் தெரிவித்தார்