கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மனைவி மீது கணவர் ஆசிட் வீச்சு

ACID1.jpeg

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஜே எம் ஒன் என்ற கோர்ட்டில் கணவன் மறைத்து வைத்திருந்த ஆசிட் எடுத்து மனைவி மீது வீசியதால் மனைவி உடல் முழுவதுமாக ஆசிடினால் பாதிக்கப்பட்டது.

உடனே அருகில் இருந்த வழக்கறிஞர்கள் கவிதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் தப்பிக்க முயன்ற போது வழக்கறிஞர்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்

கணவன் மனைவிக்கு இடையே குடும்பத் தகராறு காரணமாக மனைவி வழக்கு பதிவு செய்திருந்த நிலையில் வழக்கை விசாரிக்க நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர் நீதிமன்றத்தில் மனைவி கவிதாவின் அருகே அமர்ந்திருந்த கணவன் சிவக்குமார் தான் மறைத்து வைத்திருந்த ஆசிடை எடுத்து மனைவி மீது தலை முதல் கால் வரை ஊற்றியுள்ளார். மனைவி கவிதா உடல் முழுவதும் ஆசிட் பரவியதுடன் உடனடியாக அவரை அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். கணவர் சிவகுமாரை காவல்துறையினர் வாகனத்தில் ஏற்றி விசாரணைக்காக அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

scroll to top