கோவை மாநகர்,ஆவாரம்பாளையம்,பாலசுந்தரம் சாலையில் உள்ள அனிதா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தை கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் முன்னாள் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. கார்த்திக் அவர்கள் திறந்து வைத்து,குத்து விளக்கேற்றி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் லட்சுமிகாந்தன்,அனிதா,பீளமேடு பகுதி கழகம்- 2 பொறுப்பாளர் மா. நாகராஜ்,மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆ. கண்ணன், 40 வது வட்ட கழக பொறுப்பாளர்கள் ப. மோகன்ராஜ்,மு.ஈஸ்வரமூர்த்தி,கேபிள் சேகர்,டைட்டஸ் ஆகியோர் பங்கேற்றனர்
மக்களுக்கு சிறந்த மருத்துவம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்திலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பது தான் இந்த மருத்துவமனை திறந்தத்திற்க்கு காரணம் என்று அனிதா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் லட்சுமிகாந்தன் தெரிவித்தார்