கோவை கரட்டுமேடு இன்று காலை ரவுடி சஞ்சய் ராஜா என்பவர் அவருடைய கை துப்பாக்கியை எடுத்து தருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து நிலைய ஆய்வாளர் கிருஷ்ணலீலா, உதவி ஆய்வாளர்கள் சந்திரமூர்த்தி, சந்திரசேகர்,சிறப்பு உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் மற்றும் காவலர்களை கரட்டுமேடு முருகர் கோயில் வடபுரம் உள்ள மலை சரிவிற்கு அழைத்து வந்து அங்கு மறைத்து வைத்திருந்த கைதுப்பாக்கியை எடுத்தவுடன் ஆய்வாளரை நோக்கி ஒரு முறை சுட்டுள்ளார் . ஆய்வாளர் கிருஷ்ணலீலா தன்னை தற்காத்துக்கொள்ள அருகில் இருந்த மரத்தின் பின்பு மறைந்து விடவே மீண்டும் ஒரு முறை சுட்டுள்ளார். உடனே தங்களை தற்காத்துக்கொள்ள உடன் இருந்த உதவி ஆய்வாளர் சந்திரசேகர் தன்னிடம் இருந்த கை துப்பாக்கியால் சஞ்சய்ராஜாவின் இடதுகால் முட்டியில சுட்டுள்ளார் இதனையடுத்து சஞ்சய் ராஜா தனது கையில் இருந்த துப்பாக்கியை கீழே போட்டுள்ளார். அவரை கோவை அரசு மருத்துவமனையில சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.