கோவையை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு மத்திய அரசின் பதக்கம்

download.png

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மாநில காவல்துறை மற்றும் மத்திய ஆயுதப்படையில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு மத்திய அரசு பதக்கங்கள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். அதையொட்டி, இந்த ஆண்டில் மத்திய அரசின் பதக்கம் பெறும் அதிகாரிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டதின்படி, நாடு முழுவதும் மொத்தம் 662 அதிகாரிகள் இந்த பதக்கம் வழங்கப்பட உள்ளது.


தமிழகத்தில் இருந்து 18 அதிகாரிகள் மத்திய அரசின் பதக்கத்தை பெற உள்ளனர். மேலும், கோவை மாவட்டத்தில் இருந்து நான்கு காவல் அதிகாரிகள் இந்த பதக்கத்தை பெற உள்ளனர். இதில் கோவை மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வரும் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையராக பணியாற்றி வரும் பிரதீப் குமார், கோவை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முரளிதரன், கோவை மாநகர காவல் நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் முருகவேல் ஆகியோருக்கு பதக்கம் வழங்கப்பட உள்ளது.

scroll to top