கோவையில் 19ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கயிருக்கும் “பொருநை” கண்காட்சியின்  முன்னேற்பாடு பணிகளை செந்தில்பாலாஜி பார்வையிட்டார்

vlcsnap-2022-05-16-19h47m36s682-copy.jpg

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 19ஆம் தேதி கோவை வ.உ.சி மைதானத்தில், “பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் ஓராண்டு சாதனைகள் ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள்  வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைச்சர்  செந்தில்பாலாஜி வ. உ. சி மைதானத்தில் அமைக்கப்பட்டுவரும் “பொருநை” அகழ்வாராய்ச்சி கண்காட்சி முன்னேற்பாடு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா, மாநகர காவல் ஆணையர் பிரதீப், மாநகராட்சி துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மத்திய மண்டல தலைவர் மீனா லோகு, திமுக பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், மருதமலை சேனாதிபதி மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் முதல்வர் வரும் மைதானத்தை பார்வையிட்டனர். 

scroll to top