கோவையில் 10 ஆயிரம் தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்.,19ல் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கடந்த 26ம் தேதி முதல் தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனிடையே தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கோவையில் இன்று பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. வடக்கு மண்டலத்திற்கு பி.எஸ்.ஜி தொழில் நுட்ப கல்லூரி, மத்திய மண்டலத்திற்கு நிர்மலா மகளிர் கல்லூரியிலும், கிழக்கு மண்டலத்திற்கு ரமநாதபுரம் மகளிர் பள்ளியிலும், மேற்கு மண்டலத்திற்கு அம்மணியம்மாள் பள்ளியிலும், தெற்கு மண்டலத்திற்கு ஆர்.கே.வி பள்ளியிலும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர புறநகர பகுதிகளில் 14 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாநகர பகுதியில் மட்டும் 6 ஆயிரம் பேருக்கும், புற நகர பகுதியில் 4 ஆயிரத்து 172 பேருக்கும் என மொத்தமாக 10 ஆயிரத்து 172 அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

scroll to top