கஞ்சாவை தூளாக்கி சாக்லேட் வடிவில் உருண்டை தயாரிக்கின்றனர். கஞ்சா உருண்டையை சிறு சிறு சாக்லேட் பைக்குள் அடைத்து கஞ்சா சாக்லெட் தயாரிக்கின்றனர். அதை டீக்கடையில் , பெட்டிக்கடையில் , வீடுகளில் வைத்து கஞ்சா வியாபாரிகள் விற்று வருகின்றனர். இது குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவ்வப்போது அதிரடி ரெயிடில் காவல்துறையினர் ஈடுபடுகின்றனர். கஞ்சா ஆபரேஷன் 2.ஓ என்ற காவல்துறையின் நடவடிக்கையில் நாள்தோறும் கஞ்சா வியாபாரிகள் கைதாகி வருகின்றனர். கோவை மாநகரில் வாரத்திற்கு குறைந்தபட்சம் 10 கஞ்சா வியாபாரிகள் ஆவது கைதாகின்றனர். கோவையில் கஞ்சா விற்ப்போரை தொடர்ந்து கண்காணிக்கும் காவல் துறையினரின் அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகளின் கைது முன்பைவிட அதிகரித்திருக்கின்றன. அவ்வாறு ஒரு ரெய்டில் கோவையில் இருபது கிலோ கஞ்சா சாக்லெட்டை ரத்னபுரி காவல்துறையினர் பிடித்திருக்கின்றன.
ரத்தினபுரி காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் மற்றும் உதவி ஆய்வாளர் கஸ்தூரி தலைமையில் ரெய்டில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது கண்ணப்பா நகர் சங்கனூர் பகுதியில் இரு சக்கர வாகனம் ஓட்டி வந்த நபரை காவல்துறையினர் தணிக்கை செய்திருக்கின்றனர் அப்போது கேள்விகளுக்கும் முன்னுக்கு பின் முரனாக பதிலளிக்க அந்த நபரின் வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் வண்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா சாக்லேடை பறிமுதல் செய்ததுடன் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தியிருக்கின்றனர். விசாரணையில் கஞ்சா சாக்லேட் வைத்திருந்த நபர் பாலாஜி என்றும் காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளி என்பதும் தெரியவந்தது. காவல்துறை அதிகாரிகளின் தொடர் விசாரணையில் பாலாஜி சாதாரண கஞ்சா விற்பனையாளர் என்பதும் கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவன் சுரேஷ் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில் கஞ்சா சாக்லேட் விற்பனை குழுவின் தலைவன் சுரேஷ் உட்பட கூட்டாளிகள் 15 பேரை ரத்னபுரி காவல்துறையினர் தேடி வருகின்றனர் . உத்திரபிரதேசத்திலிருந்து கஞ்சா சாக்லெட்டுகள் தயாரிக்கப்பட்டு கோவைக்கு ரயில், லாரிகளில் கடத்தி வருகின்றனர். கஞ்சா சாக்லெட்டை விரும்புவோருக்கு அவர்கள் கேட்கின்ற இடங்களுக்கு சென்று விற்பனை செய்கின்றனர் . இதற்கு முன் ஆர் எஸ் புரம் காவல் ஆய்வாளர் ஆனந்த ஜோதி தலைமையிலான காவல்துறையினர் வடமாநில இளைஞர் கேத்தன் குமார் என்பவரை கைது செய்து கிலோ கணக்கில் கஞ்சா சாக்லெட் பறிமுதல் செய்யப்பட்டிருந்தன. வடமாநில தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா சாக்லெட் வியாபாரிகளின் இலக்காக இருக்கிறது. கஞ்சா சாக்லேட்டை 50, 100 ரூபாய்க்கு விற்கின்றனர். கஞ்சா போன்ற போதை பொருள் பயன்பாடு உடல் நலத்திற்கு தீங்கு என்பதனை கடந்து வழிப்பறி கொலை கொள்ளை சம்பவங்களுக்கும் உந்துகோலாக இருப்பதனால் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை செய்யும் போதைப்பொருள் வியாபாரிகளை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர் இந்நிலையில் போதை பிரியர்களுக்கு போதை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படுகின்ற உடல் மற்றும் சமூக தீங்கை விளக்கும் விதமாக விழிப்புணர்வு அவசியம் ஆகியிருக்கின்றன.
கோவையில் விற்பனையாகும் கஞ்சா சாக்லெட்டுகள் கல்லூரி , பள்ளி மாணவர்களை குறிவைக்கும் வியாபாரிகள்.
