கோவையில் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி: வேட்பாளர்கள் தர்ணா

cbee-768x432.jpeg.jpg

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் பதிவான வாக்குகள் ஜிசிடி கல்லூரியில் இன்று காலை முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. திமுக வேட்பாளர்கள் பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில் 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்ததாக அதிமுக, பாஜக உள்ளிட்ட 14 வேட்பாளர்கள் மற்றும் கட்சி முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்தில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், “32வது வார்டு சங்கனூர் திமுக வேட்பாளராக பாபு என்கிற பார்த்திபன் போட்டியிட்டார். அதிமுக வேட்பாளராக முருக பாபு, பாஜக வேட்பாளராக புவனேஷ் ஆகியோர் களம் கண்டனர். இந்த 32வது வார்டு வாக்கு எண்ணிக்கையின் போது திமுக கட்சியை சேர்ந்த வேட்பாளர் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறார். இதுநாள் வரை இந்த வார்டில் திமுகவினர் வெற்றி பெற்றது கிடையாது. திமுக அலுவலகம் எப்போதும் பூட்டியே கிடக்கும். அந்த வார்டில் முழு பணிகளையும் அதிமுகவினரே செய்து வந்தோம். எங்கள் வெற்றிதான் பிரகாசமாக இருந்தது. ஆனால் வாக்கு எண்ணிக்கையின் போது திமுக முன்னிலை பெற்றுள்ளது. அங்கு 4 வாக்குப் பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினர்.

scroll to top