கோவை சரணவம்பட்டியில் வடமாநில பெண் தொழிலாளியை விடுதி மேலாளர் மற்றும் வார்டன் தாக்கும் காட்சி இனையதலத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலாளர் உள்ளிட்ட 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.கோவை சரவணம்பட்டியில் தனியார் நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், நிறுவனத்தில் பணிபுரியும் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர், வேலைக்கு வர மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.இதனால், அந்த பெண் தங்கியிருந்த விடுதியின் வார்டன் லதா மற்றும் மேலாளார் முத்தையா ஆகியோர் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனால் அந்த பெண் கதறி அழும் காட்சி இனையதலத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது இந்த தாக்குதல் சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டனர்