கோவையில் யானை தாக்கி பெண் காயம் – மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி

elephant-5-02-1496382688.jpg

file photo

​கோவை மாவட்டம் தடாகம், சோமையனூர், மாங்கரை ஆகிய பகுதிகளில் காட்டுயானைகள் தண்ணீருக்காக அடிக்கடி ஊருக்குள் வருவதாக தகவல்கள் பரவி வரும் நிலையில புதன்கிழமை அதிகாலை சோமையனூர் பகுதியில் வசித்து வரும் பாலாமணி என்ற பெண் யானை பிளிறும் சத்தம் கேட்டு எட்டிப்பார்த்த போது வீட்டிற்கு வெளியில் காட்டுயானை ஒன்று நின்றுக் கொண்டிருந்ததை கண்டு  அச்சமடைந்த பாலாமணி அவரது இரு  குழந்தைகளை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஓட முயன்றுள்ளார்.

அப்போது யானை பாலாமணியை தாக்கிவிட்டு சென்றுள்ளது. இதனையடுத்து அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவரும் குழந்தைகளும் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். யானை தாக்கி கீழே விழுந்த பாலாமணிக்கு முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு  அவர் சிகிச்சை பெற்று வருகிறார். குழந்தைகள் இருவரும் எவ்வித காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

scroll to top