கோவையில் நடைபெற்று வரும் கோயம்புத்தூர் விழா 2023-ன் ஒரு பகுதியாக, நகரத்தார் தொழில்முனைவோர் சங்கம் சார்பில் முதல் செட்டிநாடு திருவிழாவை, செட்டிநாடு குழும நிறுவனங்களின் தலைவர் முத்தையா தொடங்கி வைத்தார்.
கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் (டி ஹால்) இந்த மாபெரும் நிகழ்வு செட்டிநாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை வெளிப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செட்டிநாடு மக்களுக்கு அருளும் வகையில் 9 கோவில்களின் பிரதிகள் செய்யப்பட்டு கண்காட்சி அரங்கு வாசலில் காட்சிப்படுத்தப்பட்டது.
துவக்க விழாவில் பிரிக்கால் நிறுவனங்களின் தலைவர் வனிதா மோகன், கே.பி.ஆர் குழுமத்தின் தலைவர் ராமசாமி , கிருஷ்ணா ஸ்வீட்ஸ் தலைவர் கிருஷ்ணன், குமரகுரு கல்வி நிறுவனங்களின் இணை தாளாளர் சங்கர் வானவராயர், மணிவண்ணன், கன்வீனர், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு, ராமு, தலைவர், செட்டிநாடு திருவிழா 2023, முத்துராமன், உறுப்பினர், நகரத்தார் தொழில் முனைவோர் கூட்டமைப்பு மற்றும் நிர்வாக இயக்குனர், லட்சுமி செராமிக்ஸ், தொழில் முனைவோர் கூட்டமைப்பு கோ கன்வீனர் விஷ்ணு, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், அழகப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.