கோவையில் மின்வாரிய ஊழியர்கள் வேலை நிறுத்த ஆயத்த ஆர்ப்பாட்டம்

நிலுவைத் தொகையுடன் ஊதிய உயர்வு வழங்க வேண்டும், மின்வாரியத்தில் உள்ள 58000 காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, கோவை டாடாபாத் தலைமை மின்வாரிய அலுவலகம் முன்பு வேலை நிறுத்த ஆயத்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மின்வாரிய தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுவின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

scroll to top