கோவை கெம்பட்டி காலனி பகுதியில் மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனத்தை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று துவக்கி வைத்தார்.
கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் சார்பில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நமக்காக நம்ம எம்.எல்.ஏ திட்டத்ட்தின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள மக்கள் குறைதீர்க்கும் நடமாடும் சேவை வாகனத்தை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை கெம்பட்டி காலனி தர்மராஜா கோவில் மைதானத்தில் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் முதல் முறையாக இந்த சேவைத் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்குவதற்கு முக்கிய நோக்கம் மக்கள் எம்.எல்.ஏவை தேடி செல்ல வேண்டாம். மக்கள் குறையை தேடி எம்.எல்.ஏ என்ற நோக்கில் தொடங்கப்பட்டத்துள்ளது.
தொடர்ந்து பேசிய அவர், “அ.தி.மு.க உட்கட்சி விஷயத்தில் பா.ஜ.க நுழையாது. பா.ஜ.க. அ.தி.மு.க உறவு தொடர்ந்து கொண்டிருக்கிறது. தலைமையை முடிவு அதிகாரம் அக்கட்சியின் தொண்டர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தான் உண்டு, தலைமை விவகாரத்தில் அக்கட்சியினரின் முடிவை பா.ஜ.க ஏற்றுக் கொள்ளும்.
அரிசிக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டு இருப்பது குறித்து மத்திய நிதியமைச்சரின் கவனத்திற் எடுத்துச் சென்றிருக்கிறோம். இப்பிரச்சனைக்கான தீர்வை பா.ஜ.க போராடி கொண்டு வரும். தமிழகத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்துள்ளோம். யாரும் எங்கும் தப்பிக்க முடியாது. ” என்று பேசினார்.