கோவையில் பேருந்துக்கு வழி விட்ட யானை

elephant.jpeg

கோவை மாவட்ட ஆனைகட்டி, தடாகம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகம் இருந்து வரும் நிலையில் இன்று காலை ஆனைகட்டி சாலை தூமனூர் பிரிவு அருகே ஒற்றைக்காட்டு யானை ஒன்று மலைப்பகுதியில் இருந்து வெளியே வந்துள்ளது. அச்சமயத்தில் அந்த வழியாக பேருந்து ஒன்று வந்ததை கண்ட அந்த யானை பேருந்துக்கு வழிவிட்டு ஒதுங்கியுள்ளது. இதனை பேருந்தில் இருந்த பயணிகள் அவர்களது செல்போனில் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த வீடியோ வைரலாகியுள்ளது.

scroll to top