கோவையில் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை கண்டித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை விதிகளை மீறுவதாகவும், ஜனநாயக மரபுகளை கடைபிடிக்காமல் நடந்து கொள்வதாகவும் கூறி, கோவை காந்திபுரத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின், ஆளுநரின் உருவ பொம்மையை எரிக்க முயற்சித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பு பாஜக கோவை மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தந்தை பெரியார் திராவிட கழகத்தினரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.